22 May 2009

ஹீரோக்களும் தமிழ் சினிமாவும்

ஹாலிவுட், பாலிவுட் வரிசையில் இன்று நன்றாக வளர்ந்து உள்ளது தமிழ் நாட்டின் கோலிவுட். இந்த பெயர் எப்படி வந்தது என்றெல்லாம் எனக்கு தெரியாது. தமிழர்கள் சரியான சினிமா பைத்தியம் என்று சொல்வதை விட நல்ல கலை ரசனை உள்ளவர்கள் என்று சொல்லலாம்.1940-50-60-70 இல் வெளிவந்த அனைத்து நாடகத்திற்கும் , கர்நாடக இசைக்கும் இருந்த வரவேற்பு இதற்கு சான்றாகும். என் தாத்தா காலத்தில் கிருஷ்ணனும் , தியாகராஜா பாகவதரும் பெரிய ஹீரோக்கள் . அவர்கள் பாடிய பல பாடல்களில் ஒரு சில பாடல்கள் இன்று கூட எனக்கு நினைவிருக்கிறது. எடுத்துக் காட்டு:- ஒன்னு இருந்து இருபது வரைக்கும் ...மன்மத லீலை வென்றார் உண்டோ..
இரண்டு ஹீரோகளுக்கு இருந்த திறமை
1. திரை படம் தயாரிப்பு, இயக்கம்.
2. நல்ல தமிழில் பேசி நடித்தல், பாடல்கள் பாடுதல்.
3. சமுதாயத்திற்கு நல்ல கருத்துள்ள பல விஷயங்களை சொல்லுதல்

இவர்களுக்கு பிறகு தமிழ் திரையுலகை ஆண்ட மும் மூர்த்திகள் சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்பை பற்றி இந்த பதிவில் நான் எழுத அவசியமில்லை. நடிப்புக்கு ஒரு encyclopedia என்றால் அது நமது சிவாஜி அவர்கள் தான். நம்மில் யாருமே வீரபாண்டிய கட்ட பொம்மன் , கப்பல் ஒட்டிய தமிழன் சிதம்பரம் , பாரதியார் போன்றோரை பார்த்தது கிடையாது. ஆனால் அந்த சுதந்திர வீரர்கள் அனைவரும் இன்று தமிழக மக்கள் ஞாபகம் வைத்து கொண்டு உள்ளார்கள் என்றால் அது செவாலியர் சிவாஜி அவர்களால் தான்.
நடிப்பில் அவருக்கு ஈடு வேரு யாரும் இல்லை. இப்படி பட்ட மாமனிதரை நமது இந்திய அரசு பாரத் ரத்னா தராததால் அந்த விருதின் மதிப்பு குறைந்து விட்டது. சிவாஜி நடித்த சமயத்தில் மக்கள் மனதை தன்னுடைய வசீகரத்தால் கவர்ந்தவர் எம் ஜி ஆர். அவர் நடித்த பல பாடல்களில் சமுதாய கருத்து உள்ளவையாக இருந்தது. சமுதாயத்தில் மீது இவருக்கு இருந்த பற்று தான் இவர் முதல் அமைச்சராகி மக்களுக்கு தொண்டாற்ற முடிந்தது. காதல் மன்னன் ஜெமினி கணேசன் தன்னுடைய இயல்பான நடிப்பால் வெற்றி பெற்றார். இவர்கள் மூவரும் இருந்த சமயம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகை யல்ல.

தமிழ் ஒரு பழ மொழி உண்டு. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன தென்று . அது போல் அடுத்து வந்த தலைமுறை நாயகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த். இவர்கள் அனைவரும் ஏதோ ஓரளவுக்கு நடிப்பார்கள் என்று சொல்வது oru understatement . கமலஹாசன் அடுத்த சிவாஜி, ரஜினிகாந்த் அடுத்த எம் ஜி ஆர் என்று ஒப்பிடலாம் என்பது என் கருத்து. தமிழ் ஹீரோகளின் பேரையும் புகழையும் மங்காமல் அதற்கு மெருகு ஏற்றியவர்கள் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. கமலை உலக நாயகன் என்றும், ரஜினி காந்தை சூப்பர் ஸ்டார் என்றும் உலகமே சொல்வது என்றால் அது அவர்கள் சினிமாவுக்கு செய்த நல்ல காரியத்தின் விளைவு.


இன்று
, அதாவது இருபதாம் நூற்றாண்டு ஹீரோ க்களின் நிலைமை தான் மிகவும் கவலை கிடமாக உள்ளது. இருக்கும் மூன்று ஹீரோக்கள் விஜய் , சூரியா, அஜித். இவர்கள் மூவரையும் பற்றி சொல்வதற்கு பெரிதாக இல்லை. சூரியாவின் நடிப்பு சுமார் . ஆனால் ஒரு நல்ல திரைப்படம் செய்த பிறகு பல மோசமான திரைப்படங்களில் நடிக்கிறார். விஜயின் நிலைமை மிகவும் மோசம். தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டும் தான் இவர் படத்தில் நடிக்கிறார். இது வரை அவர் நடித்த படங்கள் அனைத்திலும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை. இவருக்கு இப்போதே முதல் அமைச்சர் கணவு உண்டு. இவர் நடித்த கதா பாத்திரங்களில் ஒன்று கூட இன்றளவில் என் மனதில் பதிய வில்லை. சூரியா பரவாயில்லை, பல நல்ல கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதை ஓரளவுக்கு ஆவது இடம் பிடித்திருக்கிறார்.

அஜித் எங்கு இருக்கிறார் என்று பூத கண்டி போட்டு தான் தேட வேண்டும். எப்போதாவது ஒரு படம் தான் நடிப்பார். அது கூட சுமாராக தான் உள்ளது. இவர்கள் அனைவரை விட மிக மோசமான ஹீரோ என்றால் அது சிம்பு தான் . தன்னை தானே சின்ன சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்வது. இது வரை பல படங்கள் நடித்தாகி விட்டது. ஆனால் ஒன்று கூட உருப்படி இல்லை. இவர் தந்தையே மிஞ்சி விடுவர் போல் இருக்கிறது.இந்த மோசமான நிலைமை இன்று வருவதற்கு காரணம் யார்? திரை பட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான். இவர்களின் பேராசை தமிழ் திரை உலகின் பெரு நஷ்டம்.இனி ஆவது நல்ல கலைஞர்களை நாம் ஊக்கு வித்தல் தான் நாளைய தலை முறையின் பொழுது போக்கு நன்றாக இருக்கும்..No comments:

Post a Comment