இணைய தள யுத்தம்



விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடக்கும் உச்ச கட்ட போர் முடியும் தறுவாயில் உள்ளது. இந்த நூற்றாண்டில் நடக்கும் மிக முக்கிய போரான இது இணையத்தையும் விட்டு வைக்க வில்லை. எதெர்சியாக நேற்று இலங்கை பாதுகாப்பு படையினரின் இணைய தளத்தை பார்த்து அதிர்ந்து போனேன்.புலிகள் அதரவு இணைய தளம் ஆன www.tamilnet.com தற்போது ஊசிப்போன வடை போல் பழைய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது . போர் செய்திகளை வெகு குறைவாகவும் , இந்தியா ,இங்கிலாந்து போன்ற அயல் நாட்டில் நடக்கும் அதரவு போராட்ட செய்திகளை அதிகமாகவும் வெளியிடுகிறது .



இலங்கை ராணுவ இணைய தளம்(www.defence.lk) அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப் பட்டுஇருக்கிறது . The whole web site is maintained in a very professional manner என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. போரில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு உதவி செய்யும் போட்டோ , தமிழர்களை பிணைய கைதிகளாக வைத்திருக்கும் புலிகளின் வீடியோ , 2003 முதல் இன்று வரை அவர்கள் செய்த போரின் விவரம்,கைப்பற்றிய இடங்கள் விவரம், இன்னும் எஞ்சியுள்ள இடங்களின் விவரம், அவற்றை விளக்கும் map, 3d animation என ஒரு தகவல் களஞ்சியம் இந்த இணையத்தில் உள்ளது.



கண்டிப்பாக ஒரு முறை போய் அந்த இணைய தளத்தை பாருங்கள், பின்னர் உங்களுக்கே புரியும்.

பி. கு:-
இலங்கையிடம் இருந்து இரண்டு படங்கள் இந்திய இராணுவம் கண்டிப்பாக கற்று கொள்ள வேண்டும்.
1. கொரில்லா(guerrilla) யுத்தத்தை எப்படி இலங்கை ராணுவமும் , கடற் படையும் எதிர் கொண்டன.
. ஒரு பெரிய நாட்டின் ராணுவமும், கடற்படையும் எப்படி தங்கள் இணைய தளத்தை பராமரிக்க வேண்டும்.

" விருப்பம் உள்ளவர்கள் இந்திய ராணுவ மற்றும் கடற்படை இணைய தளத்தை www.armedforces.nic.in சென்று பார்க்கவும். நாம் தான் உலகில் IT யில் நம்பர் 1 என்ற சந்தேகம் வருகிறது. "

Comments

  1. Srilankan website looks like maintained by 'private' company.
    Indian website looks like maintained by government.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Vijay Mallya wins bid

WHAT NEXT FOR AJMAL KASAB ?

ஹீரோக்களும் தமிழ் சினிமாவும்