ஹீரோக்களும் தமிழ் சினிமாவும்
ஹாலிவுட் , பாலிவுட் வரிசையில் இன்று நன்றாக வளர்ந்து உள்ளது தமிழ் நாட்டின் கோலிவுட் . இந்த பெயர் எப்படி வந்தது என்றெல்லாம் எனக்கு தெரியாது . தமிழர்கள் சரியான சினிமா பைத்தியம் என்று சொல்வதை விட நல்ல கலை ரசனை உள்ளவர்கள் என்று சொல்லலாம் .1940-50-60-70 இல் வெளிவந்த அனைத்து நாடகத்திற்கும் , கர்நாடக இசைக்கும் இருந்த வரவேற்பு இதற்கு சான்றாகும் . என் தாத்தா காலத்தில் ந ச கிருஷ்ணனும் , தியாகராஜா பாகவதரும் பெரிய ஹீரோக்கள் . அவர்கள் பாடிய பல பாடல்களில் ஒரு சில பாடல்கள் இன்று கூட எனக்கு நினைவிருக்கிறது . எடுத்துக் காட்டு :- ஒன்னு ல இருந்து இருபது வரைக்கும் ... மன்மத லீலை வென்றார் உண்டோ .. இரண்டு ஹீரோகளுக்கு இருந்த திறமை 1. திரை படம் தயாரிப்பு , இயக்கம் . 2. நல்ல தமிழில் பேசி நடித்தல் , பாடல்கள் பாடுதல் . 3. சமுதாயத்திற்கு நல்ல கருத்துள்ள பல விஷயங்களை சொல்லுதல் இவர்களுக்கு பிறகு தமிழ் திரையுலகை ஆண்ட மும் மூர்த்திகள் சிவாஜி கணேசன் , எம் ஜி ஆர் , ஜெமினி கணேசன் . சிவாஜி கணேசனின் நடிப்பை பற்றி இந்த பதிவில் ...