இணைய தள யுத்தம்
விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடக்கும் உச்ச கட்ட போர் முடியும் தறுவாயில் உள்ளது . இந்த நூற்றாண்டில் நடக்கும் மிக முக்கிய போரான இது இணையத்தையும் விட்டு வைக்க வில்லை . எதெர்சியாக நேற்று இலங்கை பாதுகாப்பு படையினரின் இணைய தளத்தை பார்த்து அதிர்ந்து போனேன் . புலிகள் அதரவு இணைய தளம் ஆன www.tamilnet.com தற்போது ஊசிப்போன வடை போல் பழைய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது . போர் செய்திகளை வெகு குறைவாகவும் , இந்தியா , இங்கிலாந்து போன்ற அயல் நாட்டில் நடக்கும் அதரவு போராட்ட செய்திகளை அதிகமாகவும் வெளியிடுகிறது . இலங்கை ராணுவ இணைய தளம் (www.defence.lk) அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப் பட்டுஇருக்கிறது . The whole web site is maintained in a very professional manner என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை . போரில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு உதவி செய்யும் போட்டோ , தமிழர்களை பிணைய கைதிகளாக வைத்திருக்கும் புலிகளின் வீடியோ , 2003 முதல் இன்று வரை அவர்கள் செய்த போரின் விவரம் , க...